பாலிடிக்ஸ் பஞ்சாமிர்தம்..!!
#மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்திற்கு பொது மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது-கலைஞர்
(தாத்தாவுக்கு எப்பவும் தமாசா பேசுறதே வேலையாப்போச்சு...!!!)
#வைக்கோ தலைமையிலான கூட்டணி தேர்தல் வரை நீடிக்காது-தமிழிசை பேட்டி
(கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்க மேடம், உங்க கூட்டணி ஆளுங்க டவுசர கிழிச்சுக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கானுங்க..!!)
#காங்கிரஸ் தமிழகத்தில் தனித்துப் போட்டி - இளங்கோவன் சிறப்பு பேட்டி.
(இவர் வேர நடு நடுவுல சிரிப்பு காமிச்சுக்கிட்டு)
#டிசம்பர் மாசத்தில் இருந்து ஜெ-வுக்கு எதிரான அலை வீசும் – ராமதாஸ்
( அதுலாம் ஒன்னும் இல்லை ,ஆடிப் போய் ஆவணி வந்தா பாமக டாப்புல வரும்னு மறைமுகமா சொல்றாப்புல..)
#தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை- வைகோ
(இங்கு தமிழகத்தில் என்பதை மதிமுக வில் என மாத்தி படிக்கவும்)
Comments
Post a Comment