உலகம் சுற்றிய இந்தியர்- அதுவும் பைக்கில்..!!!!
இதுவரை நான் உலகம் சுற்றிய வெளிநாட்டினரைப் பற்றி மட்டுமே கண்டும்,கேட்டும் வந்திருந்தேன். முதன் முதலாக இந்தியர் ஒருவர் இதில் வெற்றிகண்டுள்ளார் என்பதை கேட்டபொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லையில்லாமல் ஊர் சுற்றும் வழக்கம் உள்ளவன் நான். சரியான திட்டமிடல் என்பது எனக்கு துளியும் கிடையாது. மற்றவர்கள் எவ்வாறு உலகம் சுற்றி வருகிறார்கள் என்பதை அறியும் பொருட்டு அவர்களைப் பற்றிய தகவல்களை விரும்பி படித்துக்கொண்டிருப்பேன். நடைமுறையில் அதை ஒரு போதும் முயற்சித்ததே இல்லை. ஆல் பிகாஸ் ஆப்(all because of) மணி(money) பிராப்ளம். சரி போய் தொலையுது. நம்ம மேட்டருக்கு வருவோம்.
விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் பரத்வாஜ் தயாலா. டிரக்கர்(trekker), செய்லர்(sailor), பைலட்(pilot) மற்றும் உலகம் சுற்றுபவர். ஒரு வித்தியாச மனிதர்.தன் ஆசைகள் ஒவ்வொன்றையும் எந்த காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காமல் பெரும்பாடுபட்டு நிறைவேற்றி வருகிறார். வித்தியாசமான ஆசைகளுக்கு சொந்தக்காரர்.சீன சுவரின் மேல் நடப்பது, இமயமலை அகோரிகளோடு ஊர் சுற்றுவது, அண்டார்டிக் பனிகிரகத்தில் சறுக்கிவிளையாடுவது போன்ற இவரது ஆசைகள் நமக்கு கிலி ஊட்டுபவை.
முதன் முதலாக ஆல் இண்டியா டூர் பைக்கில் 2004-ம் ஆண்டு 10000 கி.மீ, 44 நாட்களில் கம்பிலீட்(complete) செய்துள்ளார். அதன்பிறகு ஆசியா சுற்றுபயணம்(தாய்லாந்து,மியான்மர்,சைனா, சிங்கப்பூர், மலேசியா,ஹாங்காங், இலங்கை) 2005-ல் முடித்துள்ளார். இதன் பிறகு தான் உலக சுற்றுலா அதுவும் கரிஸ்மா பைக்கில். 18 மாதங்கள் இடைவிடாத பயணம் , 5 கண்டங்கள், 14 நாடுகள் , அதுவும் சொந்த செலவில் சுற்றி வந்திருக்கிறார். மொத்தமாக 48000 கி.மீ பைக்கில்..
எந்த ஒரு ஸ்பான்சரும் இல்லாமல் அசால்ட்டாக செய்து முடித்துள்ளார். நாமெல்லாம் பக்கத்து ஸ்டெட்டுக்கே டவுசரக் கிழிச்சுக்கிட்டு சுத்துறோம். இதற்கெல்லாம் ஒரு வேட்கை, ஒரு வெறி வேண்டும் செய்து முடிக்க. எத்தனை இடையூறு வந்திருக்கும். வைராக்கியத்தோடு சுற்றி வந்திருக்கிறார். அனுபவித்திருக்கிறார் , அனுபவித்துக்கொண்டிருக்கிறார் வாழ்க்கையை. புதிதாக கிளப் வேறு தொடங்கியிருக்கிறாராம். வாழ்ந்தால் இவர் போல் ஒரு தடவை வாழ்ந்து பார்த்திட வேண்டும்.
Comments
Post a Comment