அவசரத்தில் உதட்டை சூடு போட்டது...



      எதேச்சையாக சுஜாதாவின் “ ஒரிரவில் ஒரு ரயிலில் “ சிறு கதை படிக்க நேர்ந்தது . அதில் ஒரு நேரத்தில் கதாநாயகன் அவசரமாக காபி அருந்துவார் , அதனால் உதட்டையும் சுட்டுக்கொள்வார் . அப்பொழுது சுஜாதா ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துகிறார். ” அவசரத்தில் உதட்டை சூடு போட்டது “ என எழுதியிருக்கிறார். ஒரு உயிரற்ற பொருள் உயிருள்ள ஒருவர் மீது எப்படி பாதிப்பை ஏற்படுத்த முடியும்?..நாம் தான் “உதட்டை சுட்டுக்கொண்டோம்”. காபி தேடி வந்து நம் உதட்டை சுடவில்லை. இந்தவாக்கியம் சரிதானா?. சுஜாதாவை குறை சொல்லும் அளவு நான் பெரிய புலியெல்லாம் இல்லை, சிறு நரி தான்.யாராவது தெரிந்தால் விளக்கம் கொடுங்கள். ”அவசரத்தில் உதட்டை சூடு போட்டது “ என்பதை விட ,  ” அவசரத்தில் உதட்டை சுட்டுக்கொண்டேன் “  என்பதே சரியாகப்பொருந்தும். சரிதானா?? யாராவது தமிழறிஞர்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாகயிருக்கும். ஒரே குழப்பமாக இருக்கிறது.

Comments

  1. uthaaranathuku solren... nama mulla mithichutomna, enna solvom??? "mullu kuthiduchu" nu daana!!
    antha madri daaan ithuvum.. sujathavum tamizhar daana.. senja thapa othikita naama apdi da sutha tamizhargal aavom???? :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!